கோமுக தீர்த்தம் கோடி பலன்!!!


 கங்கை, காவிரி  புனிதமான இறை தீர்த்தம் ஒன்று உண்டு, அதுதான்

 “கோமுகத் தீர்த்தம்”

 கோமுக தீர்த்தம் என்றால் ஆலயங்களில் சன்னதிகளிலிருந்து 

அபிஷேக நீர் வெளி வருகின்ற  கோமுக நீர்த்தாரையில் தான் கோடானு கோடி தேவதைகள் உறைகின்றனர்.

 இறைவனுடைய திருமேனியைத் தழுவி வருகின்ற அபிஷேக ஆராதனை தீர்த்தமும்,

 அபிஷேகப் பொருட்களும் கலந்து வருவதால் உலகத்தில், 

பிரபஞ்சத்திலேயே இதற்கு நிகரானப் பிரசாதப் பொருள் எங்கும் கிடையாது  

மிகுந்த மகத்துவத்தைத் தன்னுள் கொண்டுள்ளது.

 கோடி யுகங்களாக ஸ்ரீராமருடைய காலத்திற்கும் முந்தையதாக இருந்து வருகின்ற சிவலிங்க மூர்த்திகளின், பெருமாள் மூர்த்திகளை ஸ்ரீஅகஸ்தியர் போன்ற

 எத்தனையோ கோடி மகரிஷிகளும், யோகியர்களும் தம் திருக்கரங்களால் பூஜித்து அபிஷேகித்து வந்த இறைச் சிலைகளின் மீதும், அர்ச்சாவதார மூர்த்திகளின் மீதும் பட்டு வருகின்ற அபிஷேக நீரென்றால்,  

கங்கை, காவிரி, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி போன்ற  நதி தேவதைகளே 

ஒன்று சேர்ந்து வந்து பூஜிக்கின்ற மூலமூர்த்திகளிடமிருந்து வருகின்ற அபிஷேக நீர் என்றால், 

எத்தனை ஆயிரம் நதிகளின், தீர்த்தங்களின் மகிமை கோமுகத் தீர்த்தம்!

கோமுக தீர்த்தம் என்றால் மூல ஸ்தான சிவ மூர்த்தி அல்லது பெருமாள் மூர்த்திகளின் சன்னதிகளில் பெறப்படுவது மட்டும் அல்ல. 

ஸ்ரீ சனீஸ்வர மூர்த்தி, நவகிரஹங்கள், முருகப் பெருமான், பிள்ளையார் என எந்த இறைச்  மூல மூர்த்திகளிடமிருந்து பெறுகின்ற கோமுக தீர்த்தத்திற்குத் தனிச் சிறப்பு 

திருச்சி அருகே 
திருமழபாடி, திருஅண்ணாமலை அருகே உள்ள ரிஷிவந்தியம் சிவாலயங்களில் நான்கு நந்திகளுக்கு 

இடையேள்ள மிகவும் சக்தி வாய்ந்த ரிஷபாயன கோமுகம் உள்ளது. 

நந்தி லோகம் தொடர்புள்ள தெய்வீக சக்தி நிறைந்த கோமுகம்!

 திருமழபாடி கோமுக தீர்த்தம், பிரிந்த தம்பதியினரை இணையச் செய்யும் 

 ரிஷிவந்திய கோமுக பூஜை,  தீவினைகளையும், தோஷங்களையும், சாபங்களையும் நாசம் செய்யும்,

 அற்புதமான இறை தீர்த்தப் பிரசாதம் இது!

 சுரைக் குடுவையை வைத்திருங்கள். இதில் பலவிதமான கோயில் தீர்த்தங்கள், 

புனிதமான கடல் தீர்த்தங்கள், கோமுகத் தீர்த்தம், பஞ்ச கவ்வியம் போன்ற முக்கியமான இறை தீர்த்தம்

குளிக்கும் நீரில் கலந்து கொள்வது சிறப்பு...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்