ஶ்ரீ வாலை தெய்வம் வழிபடு நிலைகள் :👇ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரம்



சித்தர்களால் வாலைத்தாய்,
வாலைக்குமரி என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ வாலை/ பாலாவின் வழிபாடு கல்வி,செல்வம்,வீரம்,நீங்காப் புகழ்,சித்தர் நிலை இவற்றோடு தெய்வ நிலைக்கு உயர்த்த வல்லது.

பாலா மந்திரத்தில் 
வேதவழி முறை, 
சித்தர் வழிமுறை,
தாந்த்ரீக வழிமுறை 
எனப் பல முறைகள் 
வழக்கத்தில் உள்ளன.

சரியை,கிரியையில்..
உருவம்/பாவை வழிபாடும்,

யோக செயற்பாட்டில்..
ஶ்ரீயந்திரம்,மகாமேரு,யக்ஞம்,
மூலமந்திர வழிபாடும்,
வாசியோகமாகவும்.

ஞான சாதனத்தில்..
மனம்,புத்தி,உயிர் ஒன்றாக..
தசதீக்சை, மௌன அட்சரம்,
வாலை வீடு,மெய்பொருள், 
குருபதம் ஒடுக்கமடையவும்

வழிகள் அமைத்துள்ளனர்
சித்தர்கள்.

இவ்வகை "உபாசணா" வழிமுறைக்கான
இம்மந்திரத்திற்கு அன்னை 
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தேவியின் சாபம் உள்ளதால்,
மந்திரத்தைக் சரியான வர்களிடம் முறைப்படி தீக்ஷை பெற்று சாபநிவர்த்தி செய்து ஜெபித்தால் மட்டுமே உத்தம சித்தி கிடைக்கும்.
------
மந்திரஜபத்தில் 
கணபதிக்கு அடுத்ததாக 
வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட 
10 வயது குழந்தைப்பருவ 
வடிவமே வாலை எனும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ வாலை தெய்வமே!

எல்லா யோகிகளுக்கும் 
யோக முதிர்ச்சியின் போது பரதேவி அன்னையவள்..
குண்டலி/ சாம்பவி தேவியாகவும்,
வாலை பெண் தெய்வமாகவும்,
புவணையாகவும்,
திரிபுரையாகவும்,
பராசக்தியாகவும்,
சிற்பரையாளாகவும்,
மனோண்மணி தாயாகவும்
 காட்சியளிக்கிறாள் என்று சித்தர் சுவடி நூல்கள் கூறுகின்றன.
மேலும் சில 
சூபி ஞானியரின் 
பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.

புனித மறைகளும்,சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால்..பதிலை 
"வாலை வீடு, மௌன தீட்சை யில் அறிய முடியும்.
அந்த இறை சக்தி 
முதலில் அன்னை ஸ்ரீ "வாலை"யாகவே 
*உயிர்களிலும்,பயிர்களிலும்,பஞ்சபூதங்களிலும்*
வெளிப்படுகின்றது.

(இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது, அகமுகமாக பெற உபதேச தன்மையில்தான்
பெறுதல் வேண்டும்) பின்னர்

 அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையும் பொருளாக, 
இருள் மையமாக உள்ளது. 
அதுவே மூலபொருள்- ஆதிமூலம்.

அதனுள் அசையும் சக்தியாக,ஒளிபொருளாக, இயக்கும் ஆற்றலாக, 
மும்மூர்த்திகளின் செயலாகவும், மாயாரூபங்களை தோற்றமும்-முடிவுறும் சக்தியுமாகவும்,
தேகத்தின்ஆறாதார சக்திகளாகவும் *வாலையே*
திகழ்கிறது.

ஸ்தோத்திரங்களை,
ஸ்லோகங்களை  விட 
*மூலமந்திர ஜெபம்* அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு 
அருகில் விரைவாய் 
அழைத்துச் செல்லும்.

பீஜம் என்றால் விதை  
என்று பொருள்.
விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.
எனவே பீஜ மந்திரஜபம் 
உயர்வாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|.


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 
சடாட்சரி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|~சௌம் க்லீம் ஐம்||.

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 
நவாட்சரி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|~சௌம் க்லீம் ஐம்||~ஐம் க்லீம் சௌம்||

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.

எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,
ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாழையடி வாழையாக சித்தருகளுக்குத் தெய்வம் 
என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.
சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.

வசீகர சக்தி,
ஆண்-பெண் வசீகரம் 
எல்லாம் தருவதால்..

பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு, 
அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளை சந்திக்க நேரும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்